12 Sep 2012

12.9.12 ல்  வக்ர நிவர்த்தியாகும் சனிப் பெயர்ச்சிப் பலன்கள்


வக்ர நிவர்த்தியாகும் சனிப் பெயர்ச்சி பலன்கள் :
இதுவரை வக்ர சஞ்சாரத்திலிருந்த சனி பகவான் 12.9.12. முதல் வக்ர நிவர்த்தியாகி மீண்டும் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த வக்ரநிவர்த்தி சஞ்சார பலன்கள் எப்படி இருக்கும் என்று கீழே தரப்பட்டுள்ளது.  துலா ராசியில் சஞ்சரிக்கும் இந்த சனி உச்ச சனியாக சஞ்சரிப்பதால், இந்த சஞ்சாரத்தில் பொதுவாக நற்பலன்களே நிகழும்.  சனீஸ்வரனின் திருத்தலங்களான திருநள்ளாறு, குச்சானூர், கோலியனூர் முதலிய சனீஸ்வரனின் திருத்தலங்களுக்குச் சென்று சனீஸ்வரனை தரிசித்தால் அவரது திருவருள் கிடைக்கும்.சனி பகவானை சாந்தப்படுத்த சில எளிய பரிகாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.தினசரி காக்கைக்கு அன்னமிடவும்.
சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றவும்.சனி பகவானுக்கு கருங்குவளை மலர் சாற்றி வன்னி இதழ்களால் அர்ச்சனை செய்யவும். சனிக்கிழமை அன்று    ஒருவேளை உணவு மட்டும் உண்டு விரதம் அனுஷ்டிக்கவும்.சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் கடன் வாங்கவோ கடன் கொடுக்கவோ கூடாது.ராம நாப ஜெபம் அல்லது  ஆஞ்சனேய வழிபாடு நன்று.

ஏழரைச்சனி, அஷ்டமச் சனி மற்றும் அர்தாஷ்டம சனி விலகும்போது செய்ய வேண்டியவை:

ஒரு புது இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் தன் முகத்தை தானே பார்த்துவிட்டு அந்த இரும்புச் சட்டியை தக்க தாம்பூல தட்சிணையுடன் தானமாக வழங்க வேண்டும் பிறகு மங்கலப் பொருள்களைப் பார்க்க வேண்டும்.

கருப்பு எள்  மற்றும் கருப்பு முழு உளுந்தை முடிந்த துணியை தாம்பூல தட்சிணையுடன் கருத்த (அ) அங்கஹீனருக்கு தானமாக வழங்கவும்.
சூடான சர்க்கரைப் பொங்கலை தலை வாழை இலையிலிட்டு அதில் எள்ளுப் பொடி தூவி ஒரு வறியவர்க்கு தாம்பூல தட்சிணையுடன் தானமாக வழங்கவும்.
சனிபகவான் ஷேத்ராடமான திருநள்ளாறு சென்று அங்குள்ள நளமகா தீர்த்தத்தில் மூழ்கி இயன்ற அளவு சாந்தி செய்து திருநள்ளாறு நாயகனை வழிபட நலம் கூடும்.
இனி சனியின் வக்ர நிவர்த்திப் பலன்களை ஒவ்வொரு ராசியாகப் பார்க்கலாம்:
மேஷம்:
இப்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில்  12.9.2012 முதல்  உச்ச சனியாக சஞ்சரிக்கிறார். மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய பலன்களாக நிகழும். எல்லா முயற்சிகளும் வெற்றிதரும். அலுவலகத்தில் வேலைப்பளூ கூடும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். உங்கள் எதிரிகளும் ஏமாற்றுக்காரர்களும் அழிவார்கள். . வீடு கட்ட ஆரம்பித்தீர்களானால், செலவு இரட்டிப்பாகி விழி பிதுங்கும். வெளிநாட்டு கடிதத் தொடர்புகள் அனுகூலமான பலன்களைத் தரும்.. கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு சாதமாக தீர்ப்பு வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.எந்த விஷயத்திலும்  கோபத்தைக் காட்டினால், அந்த் கோபம் உங்களை கவிழ்த்துவிடும். பெற்றோரின் உடல்நிலையை  முன்னிட்டு உங்களுக்கு மருத்துவச் செலவு ஏற்பட்டு சரியாகும்.
அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு வேண்டிய இடமாற்றம் வரும். மேலதிகாரிகள் சொல்படி நடப்பதன் மூலம் தொல்லைகள் வராமல் தப்பிக்கலாம். புதிதாக தொழில் தொடங்கி கையை சுட்டுக்கொள்ள வேண்டாம். லாபத்தை எதிர்பார்கக் இது தருணம் அல்ல. தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டால் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும்.வேலையை இழக்க வேண்டி வரும்.  இயந்திரங்களை வைத்து வேலை செய்பவர்கள் புதிதாக இயந்திரங்கள் வாங்குவதைத் தள்ளிப்போடவேண்டும்.புதிதாகத் தொழில் தொடங்க இது சரியான நேரம் அல்ல. எதிர்பார்த்தபடி அதிக லாபம் கிடைக்காது. தொழிலாளர்கள்  போராட்டங்களில் ஈடுபடுவது கெட்ட பெயரை வாங்கித் தரும். தொழிலாளர்கள் ஒற்றுமையோடு செயல்பட்டு தொழிலதிபர்களுக்கு உதவியாக இருப்பார்கள். தற்காலிகப் பணி நீக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.   கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் நிதானித்துப் பழகவேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பெரும் தொகைகளை நிலங்களில் முடக்ககூடாது.  எந்த முயற்சிக்கும் கையில் பணமில்லாது போகும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பில் இருப்பீர்கள். நினைத்தபடி பணியில் சிறப்பு பெறுவீர்கள். கோபத்தை அடக்க வேண்டும்.
விடாமுயற்சியோடு உழைத்தால் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். . கேளிக்கை , பொழுது போக்குகளை பெரிதாக எடுத்துக்கொண்டால், படிப்பு காலை வாரிவிடும்.
சினிமாத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு  புதிய பட வாய்ப்புகள் ஒப்பந்தமாகும்.
அரசியலில் உள்ளவர்கள் தங்கள் சுயநலமற்ற சேவையால் தலைமையின் பாராட்டுதலைப் பெறுவதோடு புதிய பொறுப்பும் கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் முன்னேறுவார்கள்.பரணி நட்சத்திரக்காரர்களுக்கு  புதிய பதவி கிடைப்பதில் தாமதமாகும்.
உச்ச சனியானவர் உங்களுக்கு திடீர் பண வரவுகளைத் தருவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  சிலர் அரசு வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். குடும்பத்தில் நல்ல திருப்பம் ஏறபட்டு குதூகலம் உண்டாகும். கண்டச்சனி சில தடைகளயும் தாக்கங்களையும் கொடுக்கும். ஆனால், அவை உடனடியாக நீங்கிவிடும்  பிள்ளைகளால் செலவு ஏற்படும்.  வாகன விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்துக்கொள்ள வேண்டூமானால்,  அதிக வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிதானமாக செல்ல வேண்டும். உச்ச சனியானதால் தீங்குகள் அவ்வளவாக ஏற்படாது. கடன் தொல்லைகள் தீரும். தொழிலில் விருத்தியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும்.
ரிஷபம்:
வக்கிர நிவர்த்தி பெற்ற சனி 12.9.2012 முதல் உங்கள் ராசிக்கு 6-மிடத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் நல்ல பலன்களைக் கொடுக்கும். வேலை இல்லாதவர்கள் தகுந்த வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.  பிரிந்து வாழ்ந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை தீரும். வெளிநாடு செல்ல விரும்புவோரின் எண்ணம் நிறைவேறும். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்து சேருவார்கள் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். நல்ல உதவி கிடைக்கும். பொருளாதார உதவி பிள்ளைகள் மூலம் கிடைக்கும்.    வழக்குகளில் வெற்றி நிச்சயம். சிலர் புது வீடு கட்டுவார்கள்.  பொருளாதார நிலை உயரும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் ஏற்படும்.வெளிநாட்டிலோ அல்லது வெளி மாநிலத்திலோ  வேலை செய்பவர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள்.2012 இறுதிவரை நீங்கள் அமைதியாகப் பேசினாலும்   கோபமாக பேசுவதுபோல் தோன்றும். . புத்திர சோகம் ஏற்படும். உங்கள் பிள்ளைகள் வண்டி வாகனங்களில் செல்லும்போது ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிப்பது நலல்து. சகோதரர்களிடையே இருந்து வந்த பகை தீரும்.
தொழிலதிபர்கள் தொழிலில் உயர்வடைவார்கள். நல்ல லாபம் கிடைக்கும்.  இதுவரை மந்தமாக இருந்து  வந்த வியாபாரம் வாடிக்கையாளர்கள் வருகையால் சூடு பிடிக்கும். நலல் விற்பனையும் லாபமும் கிடைக்கும். புதிய கிளை ஒன்று துவக்கலாம். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைத்து லாபம் அடைவார்கள். முதலாளிகளுக்கு தொழிலாளிகள் மிகவும் உதவியாகவும், நல்லிணக்கத்துடனும் இருப்பார்கள். அதன்மூலம் உற்பத்தி பெருகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்கள் கேட்கும் உதவிகளை செய்துகொடுப்பார்கள்.
அரசு ஊழியர்கள் அதிகரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக தவறான செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.  ஆனால் நிர்ப்பந்தம் உயரதிகாரிகளிடமிருந்து வருவதால், மீற முடியாது என்பதால், விடுப்பிலாவது சென்றுவிடவேண்டும்.தவறான செயலில் ஈடுபட்டால் சனிபகவான் கடுமையான தண்டணையைக் கொடுப்பார். நேர்மையுடனும் கண்டிப்புடனும் இருப்பவர்களிடமிருந்து அதிகாரிகளும் ஒதுங்கிப் போவார்கள்.
மாணவர்கள் குற்ற வழக்குகளில் சிக்க நேரும். கண்டம் ஏற்படவும் கூடும். சக மாணவர்களின் போட்டி மனப்பான்மை கெடுதலையே செய்யவல்லது.
கலைஞர்களுக்கு புது பட வாய்ப்புகள் கிடைக்கும். ஒருசில கலைஞர்கள் ப்டப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று வருவார்கள். வருமானம் கூடும்.
அரசியல்வாதிகளுக்கு இது யோகமான நேரம். தலைமையிடம் நற்பெயர் வாங்குவதோடு  அதிகார பதவிகளையும் அடைவார்கள். உங்கள் எதிரிகள் தலையெடுக்க முடியாமல் பதுங்குவார்கள்.
மிதுனம்:
வக்ர நிவர்த்திக்குப் பின்  செப்டம்பர் 12-ம் தேதி முதல், சனி பகவான் துலா ராசிக்கு பெயர்ச்சியாவது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் அமைகிறது.வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்.அந்நிய மதத்தைச் சேர்ந்தவர்களும், அந்நிய மொழி பேசுபவர்களும்   உங்களுக்கு பக்க பலமாக இருப்பதுடன் லாப்ம் ஈட்டித்தரும் வழியில் செயலாற்றுவார்கள். உற்ற துணையாகவும் இருப்பார்கள். உங்களை மற்றவர்கள் மதிப்பார்கள். சமூக அந்தஸ்து ஏற்படும். செய்யும் தொழில் லாபத்தை தரும். 2014-ம்  ஆண்டு  முழுவதும் நீங்கள் அமைதி காக்க வேண்டும். உங்கள் பேச்சு அத்தனையும் மற்றவர்களால் தவறாகவே எடுத்துக்கொள்ளப்படும். சனியின் 5-ம் இடத்து சஞ்சாரம் புத்திரர்களைப் பற்றிய விசனத்தைக் கொடுக்கும். உங்கள் பிள்ளைகள் வண்டி  வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அவர்களால் உங்கள் பெயர் கெட்டுப்போகும் அளவுக்கு களங்கம் ஏற்படும் நிலை வரலாம். குடும்ப கௌரவம் பாதிக்கப்படும்.  பிள்ளைகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்துகொள்ளவேண்டும். புத்திர சோகம் ஏற்படும். அவர்கள் விஷயத்தில் கண்காணிப்பு அவசியம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் நஷ்டத்தை சந்திப்பீர்கள். எனவே கூட்டுத் தொழிலில் முதலீடு செய்யும்போது நிதானம் தேவை. அரசாங்க காரியங்களில் அனுகூலத்தை எதிர்பார்கக் முடியாது. ஆனால் குறுக்கு வழிகளைக் கையாளக்கூடாது. சொத்துகள் வாங்குவீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
அரசுத் துறையில் உள்ளவர்கள் நாணயத்தோடும் நேர்மையோடும் நடந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். லஞ்சம் போன்ற குறுக்கு வழி நிச்சயம் குழியில் தள்ளும். உங்கள் மேலதிகாரிகளும்கூட சில சமயம் தவாறான செயல்களை செய்யச் சொல்லி உங்களை நிர்ப்பந்திக்கக்கூடும். கட்டாயம் அதற்கு அடிபணிய வேண்டாம். உங்களை மாட்டிவிட்டு விட்டு அவர்கள் தப்பிக்கும் சந்தர்ப்பம் வரும். ஏனென்றால் சனியின் 5-மிட சஞ்சரம் அவ்வளவு சரியில்லையாதலால், அதிகாரி காட்டிக்கொடுக்காவிட்டாலும்கூட நீங்கள் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புதான் அதிகம். தவறான செயலுக்கு ஆட்பட்டால், சனிபகவான் கடுமையான தண்டனைக்கு ஆட்படுத்திவிடுவார்.அந்த மாதிரி சமயங்களில் நீங்கள் விடுப்பில் சென்று விடுங்கள். அது ஒரு தப்பவைக்கும் வழியாகும். இடமாற்றம் வேண்டியோ அல்லது வேண்டாத இடமாற்றத்திலிருந்து தப்பிக்கவோ குறுக்கு வழிகளைக் கையாளக்கூடாது. வேண்டிய இடமாற்றம் தாமதமாக கிடைக்கலாம் அதனால், பொறுமையுடன் காத்திருங்கள். பதவி உயர்வும் சற்று காலதாமதத்துடன் கிடைக்கும். இதுவரை வராமல் இருந்த நிலுவைத் தொகைகள் அனைத்தும் வந்து சேரும். வேலைப்பளு குறையும். பணிநீகக்ம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலை பார்க்கும் இடத்தில்  சக ஊழியர்களும் மற்றவர்களும் உங்களுக்கு அணுசரணையாக இருப்பார்கள்.
தொழிலில் உங்களுக்கு போட்டி குறையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியளிக்கும். சிறு வியாபாரிகள் பெருத்த லாபம் பெறுவார்கள். புதிய கிளை திறக்க விரும்பினால் கொஞ்ச காலம் தாமதித்து தொடங்கினால் லாபம் கிடைக்க வழி உண்டு. புதிய வியாபாரம் தொடங்குவதைவிட இருக்கும் வியாபாரத்தை பெருக்கலாம். போட்டி வியாபாரிகளின் தொல்லை இருக்காது. உங்கள் தொழில் வளர்ச்சியை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒதுங்கிவிடுவார்கள். தொழிலதிபர்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நல்லிணக்கம் இருக்கும். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கிடைப்பதால், உற்பத்தி அதிகரிக்கும். தொழிலாளர்கள் தொழிற்சங்கம் மூலம் தொடரப்பட்ட வழக்குகள் வெற்றியைக் கொண்டு வரும். பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆனால், அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் தொழிலாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் மேம்பாடு கிடைக்கும். அதிக ஈடுபாடு உண்டாகும்.  ஞாபகசக்தி அதிகரிக்கும். மற்ற மாணவர்களுக்கு உதவும்போது கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் நீங்கள் பிரச்சினையில் மாட்டிக்கொள்வீர்கள். தீயவழியில் ஈடுபடும் மாணவர்கள் காவல்துறை நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரும். நியாயமாக செயல்படும் மாணவர்கள் உயர்படிப்பில் நல்ல வெற்றியை அடைவார்கள்.
கலைத் துறையில் உள்ளவர்கள் புதிய வாய்ப்பினைப் பெறுவார்கள். பெரும் புகழ் அடைவார்கல் .சிலருக்கு பிரச்சினைகள் வரலாம். அவற்றில் குடும்பப் பிரச்சிகளும் அடக்கம்.  குடும்ப விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது. சில கலைஞர்கள் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று வருவார்கள். கலைஞர்கள் மத்தியில் போட்டி அதிகம் ஏற்படும். ஆனாலும் திறமையைக் காட்டுவதன்மூலம் ஜொலிக்கலாம்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த கௌரவப் பதவிகள் வந்து சேரும். ஆனால் உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் நிதானம் தேவை. கட்சித் தலைமையால் கண்டிக்கப்படுவீர்கள். கட்சித் தலைமையின் கண்காணிப்புக்கும் ஆளாவீர்கள்.  உங்கள் எதிரிகள் உங்களைப் பற்றிய தவறான கருத்துக்களை  பொதுமக்களிடம் பரப்பக்கூடும். சனிபகவான் பக்கபலமாக இல்லை . எனவே  எதிலும்  நிதானம்  இருந்தால் சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிரிகளின் குணமறிந்து விலகிச் சென்று பதவியில் நீடிப்பது நல்லது. குறுக்கு வழியைத் தேந்தெடுக்க வேண்டாம். த்லைமை உங்களை ஓரம் கட்டிவிடும்.
கடகம்:
வக்கிரத்திலிருந்த சனி பகவான் தற்போது வக்கிர நிவர்த்தியாகி செப்டம்பர் மாதம் 12-ம் தேதி முதல்  துலா ராசியில் சஞ்சரிக்க உள்ளதால், உங்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகிறார். ஆனாலும் உச்ச சனியாக சஞ்சரிப்பதால் கெடுதல்கள் அதிகம் வர வாய்ப்பில்லை. லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவானின் சஞ்சாரமும் கை கொடுப்பதால்,தடைப்பட்ட திருமணம் இனிதே முடியும். வெளிநாடு போகும் திட்டமும் நிறைவேறும்.  வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்படும். இந்த ராசிப் பெண்களின் கணவர் வெளிநாடு சென்று நன்கு சம்பாதித்து பொருள் ஈட்டுவார். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். நிலம் வாங்குதல் தொடர்பான வேலைகள் தடங்கலின்றி நடக்கும் . வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும் உறவினர்களை அதிகம் நம்பவேண்டாம். அவர்களால் எந்த பலனும் இல்லை. எதிரிகள் விலகிச் செல்வார்கள். பெற்றோரின் உதவி உண்டு. கடன் தொல்லையிலிருந்து விடுப்டலாம். தந்தையால் மருத்துவ செலவு வரும் . வேலை செய்யும் இடத்தில் போட்டி பொறாமை இருக்கும். உங்கள் உடன்பிறந்தோர் மத்தியில் நிலவி வந்த பிரச்சினைகள் சுமுகமாகும்.உங்களுக்குள் நிலவி வந்த பகை அகலும். சகோதர-சகோதரிகளின் திருமணம் கூடிவரும். பங்களிகள் மற்றும் மாமன்கள் வலுச் சண்டைக்கு வருவார்கள்.  அவ்வழிப் பெண்களும் தொல்லை கொடுப்பார்கள். எனினும் உங்கள் வழி நல்வழி என்றால், சனி பகவான் உங்களைக் கைவிடாமல் காப்பாற்றுவார்.  சிலருக்கு அரசுப் பதவி கிடைக்கும். பண வசதிக்கு குறைவிருக்காது என்றாலும் செலவுகளும் கூடும். வரவுக்கு மிஞ்சிய செலவு உள்ளது.  புதியவர்களிடம் நட்பு பாராட்டவேண்டாம். அவர்களிடம் கவனமாகப் பழகவேண்டும். ஆடம்பரப் பொருளை ஆசைப்பட்டு வாங்கி சேர்ப்பீர்கள். புதிய வீடும் சொத்துக்களும் அமையும். வாழ்க்கையில் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கும். சினிமா கலைஞர்களும் ஏற்றம் பெறுவார்கள். அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய நிலுவைப் பாக்கிகள் வரும். உங்களுக்கு வேண்டாதவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். எல்லா காரியங்களையும் தாமதித்து நிதானமாகச் செய்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம். பிள்ளைகளின் போக்கை கண்காணிக்க வேண்டியிருக்கும். அதன்மூலம் அவர்களை காப்பாற்ற முடியும்.  அவர்களின் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஏற்படும் முரண்பாடுகளைத் தவிர்க்கலாம். வழக்குகள் சாதகமாக முடிவடையும்.
அரசு வேலையில் உள்ளவர்கள் வேண்டிய இடமாற்றம் பெறுவார்கள்.  பதவி உயர்வுடன் ,மாறுதல் வந்து சேரும். மேலதிகாரிகளின் அணுசரணை கிடைக்கும். அரசிடமிருந்து வரவேண்டிய சலுகைகள் வந்து சேரும். வேலை பார்க்கும் இடத்தில் உள்ளவர்கள் அணுசரணையாக இருப்பார்கள். வேலைப்பளு குறையும்.
சொந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். போட்டி வியாபாரிகள் ஒதுங்கிவிடுவார்கள். சிறு வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். புதிய கிளையை தாமதித்து தொடங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம். தொழிலாளர்கள் தொழிலதிபர்களுடன் சுமுகமான போக்கை கடைபிடிப்பார்கள். அதனால் உற்பத்தி பெருகும். தொழிற்சங்கம் நடத்தும் வழக்குகள் வெற்றிபெற்று தொழிலாளர்களுக்கு வேண்டிய சலுகைகளைப் பெற்றுத் தரும். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் திரும்பவும் பணியில் சேருவார்கள். புதிய வியாபாரம் தொடங்குவதைவிட இருக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்துவது நல்லது. அயல்நாட்டுத் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சக தொழிலாளுடன் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மாணவர்கள்  மந்த நிலை மாறி சிறப்பாக படிப்பார்கள். ஞாபக சக்தியுடன் கலவியில் ஈடுபாடு காட்டுவார்கள். நியாயமாக நடக்கும் மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள். தீய வழியில் செல்பவர்கள் போலீஸிடம் சிக்க நேரும். நல்வழியில் செல்பவர்கள் எதிர்பார்த்தபடி கல்வியில் உயர்வார்கள்.சிலர் மாநில அளவில் முதலிடம் பிடிப்பார்கள்.  தொழிற்கல்வி நன்கு கை கொடுக்கும். கலவி நிறுவனத்தின் பாராட்டைப் பெறுவார்கள். கேம்பஸ் செலக்ஷனும் கிடைக்கும்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு மத்தியில் போட்டி அதிகம் இருக்கும். இருந்தாலும் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வருமானம் கூடுதலாகும். குடும்பப் பிரச்சினை மீடியா வரை வந்துவிடும் அபாயம் உள்ளதால், குடும்பப் பிரச்சினைகளை ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும். அரசின் தண்டனையும் சிலருக்கு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சிலருக்கு தலைமையால் கண்டிக்கப்படும் நிலை உருவாகும். எதிலும் அமைதி காப்பது அவசியம். ஓயாது உழைக்கவேண்டி வரும்.  கூட இருப்பவர்களே எதிரிகளாக மாறுவார்கள். அகாலநேரத்தில் வீடு திரும்பவேண்டாம்.  புதிய பதவிக்கு ஆசைப்படுவது எதிர்மறையாக செயல்படும் அபாயம் இருப்பதால், பழைய பதவியில் நீடிப்பது நல்லது. பூச நட்சத்திரக்காரர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அவர்களது நற்செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்:
இதுவரை உங்கள் ராசிக்கு 2-மிடத்தில் வக்கிர சஞ்சாரம் செய்துகொண்டிருந்த சனிபகவான் , வக்கிர நிவர்த்தியாகி, 12.9.12. முதல் மீண்டும் துலா ராசியில் உங்கள் ராசிக்கு 3-மிடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். உங்களுக்கு நற்பலன்கள் கூடும்.  பிரபல யோகம் ஏற்படும்.  உங்கள் அந்தஸ்து உயரும்.  வெளிநாடு செல்லத் திட்டமிட்டவர்கல் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். பெற்றொர் வழியில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். வெளிமாநிலம் வெளிநாட்டுத் தொடர்புகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். . உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.  திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் நற்செய்தியை உங்கள் குடும்ப டாக்டர் கூறுவார். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். பொதுவாழ்க்கையில் உங்கள் செயல்பாடுகள் மிடுக்குடன் இருக்கும். பெரிய பதவிகள் தேடிவரும். மக்களால் போற்றப்பட்டு நற்பலன்களை அடைவீர்கள். மனைவி மக்கள் உங்களுடன் சுமுக உறவில் இருப்பார்கள். உங்களை விட்டு பகைத்துக்கொண்டுபோன சொந்தங்கள் திரும்ப வந்து சேருவார்கள். பெற்றோருக்கான மருத்துவச் செலவு கூடும். சிலர் குடும்பத்துடன் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு வந்து நீங்கும். இதுவரை உங்கள் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் அகலும். சிலருக்கு அரசுப் பணிகள் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க சலுகைகள் கிடைக்கும். ஆடம்பரச் செல்வு செய்து ஆடம்பரப் பொருள்களை வாங்கிக் குவிப்பீர்கள். சில அரசு ஊழியர்கள் பேராசைப்பட்டு கையூட்டுப் பெற்று குற்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகி காவல்துறை நடவடிக்கைக்கும் ஆளாகும் நிலை வரலாம். தூர தேசப் பிரயாணங்கள் ஏற்படும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவார்கள். இந்தக் காலக்கட்டத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வேலை தேடும் பிள்ளைகள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நல்ல வரன்கள் வந்து சேரும். ஷேர் மார்க்கெட் செய்வோர் நல்ல லாபம் காண்பர். மாமன் வழிச் சொந்தங்களுடன் இருந்த பிணக்கு நீங்கும். பேரும் புகழும் பணவரவும் வந்து சேரும். கணவன் மனைவியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அண்ணன் தம்பி உறவுகள் சிறப்பாகும்.
அரசு ஊழியர்கள் அதிக வேலைப்பளுவை சந்திக்க மாட்டார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.உயர் அதிகார்காரிகள் உங்கள் செயலைப் பாராட்டுவார்கள். உற்சாகமாக செயல்பட்டு உங்கள் கடமையைச் செய்வீர்கல்.  விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். அரசிடமிருந்து கிடைக்கவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேரும். விட்டுப்போன பதவிகள் மீண்டும் வரும். சிலர் பொறுப்பான பதவிக்கு மாற்றம் ஆவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
தொழிலதிபர்களானாலும் சரி, சிறு வியாபாரிகளானாலும் சரி லாபத்தைக் காண்பீர்கள். புதிய கிளை தொடங்க இதுதான் சரியான தருணம். தொழிலாளர்கள் முதலாளிகளுடன் ஒற்றுமையுடன் பழகுவார்கள். இதனால் உற்பத்தி பெருகி லாபமாகும். சந்தைக்கு வரும் பொருளை வாங்க வாடிக்கையாளர்கள் மொய்ப்பார்கள் போட்டி வியாபாரிகள் உங்கள் முன் எதிர்த்து நிற்க முடியாமல் ஒதுங்கி வேறு தொழில் தேடிச் செல்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். நடைபாதை வியாபாரிகள் புதிய கடை ஒன்றை வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவார்கள். தொழிற்சங்கம் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் பணியாளர்களுக்கு கிடைக்கும்.
மாணவர்களுக்கு இது அதிர்ஷ்டமான நேரம். படிப்பில் ஜொலிக்க வேண்டிய நேரம். ஆனால் உங்களுக்கு சம்பந்தமில்லாத  பிரச்சினைகளில் ஈடுபடவேண்டாம். நல்ல நண்பர்களுட்ன் மட்டுமே பழகி நிறுத்திக்கொள்ளவேண்டும். உயர்கல்வி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து கல்வி நிறுவனத்தின் பாராட்டைப் பெறுவார்கள். கேம்பஸ் செலக்ஷன் கிடைக்கும்.  படித்துக்கொண்டிருக்கும்போதெ வேலை உறுதியாகும்.
கலைத்துறையினருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும். வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி வருவீர்கள். பேரும் புகழும் கிடைக்கும். நீங்கள் நடித்த படம் ஒன்று பாராட்டிப் பேசப்படும். நல்ல படத்தை ரசிகர்களுக்கு கொடுப்பீர்கள். கலைஞர்களுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் தெரியும்.
அரசியல்வாதிகள்  எதிர்பார்த்ததைவிட பெரிய பதவிகள் கிடைக்கும். கட்சித் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். பொதுமக்கள்  உங்களது செயலை பாராட்டிப் பேசுவார்கள். உங்களை அளவுகடந்து நேசிப்பார்கள். எதிராளிகள் உங்களுக்கெதிராக பரப்பும் வதந்திகளை நம்பாதது மட்டுமின்றி அவர்களை துரத்தியடிப்பார்கள். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். சில அரசியல்பிரமுகர்கள் பெண்கள் தொடர்பால் வழக்குகளில் சிக்குவார்கள்.   பேரைக் கெடுத்துக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருந்தால், இது உங்களுக்கு ஒரு பொற்காலம்.
கன்னி:
செப்டம்பர் 12-ம் தேதி  கன்னி ராசிக்கு 2-ம் இடமான துலா ராசிக்கு வக்கிர நிவர்த்தியாகி , உச்ச சனியாக பிரவேசிக்கிறார்.   சனி பகவான் அருளால் பிரபலமான யோகங்கள் வந்து சேரும். உங்களது சேமிப்பை நல்ல வழியில் முதலீடு செய்வீர்கள்.  அதனால் பொருளாதார நிலை உயரும். வருமானம் பெருகும்.நிலையான பொருள் வந்து சேரும். பொருளாதார மந்த நிலை மாறி கைநிறைய பணம் வந்து சேரும்.  திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும்.கணவன்-மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.  சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வாரிசுகள் உருவாகும்.  வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலசமயம்  மனதில் பய உணர்வு வரும். அதனை தொடரவிடாமல் செய்துகொள்ளவும். மற்றபடி எல்லோருக்கும் நல்ல பலன்களாகவே நிகழும்.  வெளிநாட்டுத் தொடர்புகள் கூடும்.  மாணவர்கள் கல்வியில் இருந்துவந்த மந்த நிலை மாறும். அக்கம் பக்கம் உள்ளவர்களால் குடும்பத்தில் குழப்பம் வரும்.  பெண்களால் நிம்மதி கெடும். ஆண்கள் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  உதவி செய்யபோய் உபத்திரத்தை விலைக்கு வாங்கிக்கொள்வீர்கள். . பிள்ளைகளைக் கண்காணிக்கவேண்டும். அவர்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டு துவண்டு போகலாம். ஏதாவது விபரீத முடிவுக்கும் கூட [போகலாம். எனவே அவர்களைக் கண்காணித்தபடியே இருக்கவேண்டும்.  சிலர் குறுக்கு வழியை பின்பற்றி சிரமத்துக்கு ஆளாவார்கள். உறவினர்கள் நிதி உதவி கேட்டு தொல்லை தருவார்கள். பிள்ளைகளின் கல்வித் தடை நீங்கும். பிள்ளைகள் உடனே வேலைக்குச் செல்வார்கள். பிரிந்த உறவுகள் வந்து சேரும். வழக்குகளில்  சாதகமான தீர்ப்புகள் வரும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்ற நிலை மாறி மருந்துகளில் குணமாகிவிடும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். தொல்லைகொடுத்து வந்த பிள்ளைகள் நல்லவர்களாக மாறுவார்கள். குடும்பச் சீர்திருத்தங்கள் நடக்கும். பெற்றோர் வழியில் மருத்துவச் செலவு கூடும். போட்டி பந்தயங்களில் கலந்துகொள்ளும் வீரர்கள் உரிய வெற்றியைப் பெறுவார்கள்.
அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் நேர்மையுடன் செயல்பட்டால் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விருப்பமில்லாத இடத்துக்கு மாறுதல் வந்துவிட்டால் உடனே போய் வேலையில் சேர்ந்து விடுவதை விட்டுவிட்டு குறுக்கு வழியில் அந்த மாறுதலை மாற்ற நினைப்பவர்கள் அதிகாரிகளின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாவீர்கள். வேலைப்பளு அதிகம் இருக்கும் ஆனால் அலைக்கழிப்பு இருக்காது. பதவி உயர்வு வரும். ஆனால் தாமதமாக வரும். சக பணியாளர்களுக்கு உதவப் போய் நீங்கள் பிரச்சினையில் மாட்டிக்கொள்வீர்கள். பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். தொல்லை கொடுத்துவந்த அதிகாரிகள் மாறுதலில் செல்வார்கள். பணியாளர்களுக்கு வரவேண்டிய நிலுவை பாக்கிகள் வந்து சேரும். உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். இதுவரை கடுமையான வேலைப்பளுவை சந்தித்து வந்த உத்திர நட்சத்திரக்காரர்கள் பாரத்தை சற்று  இறக்கி வைத்த மாதிரி உணர்வார்கள்.  அவர்களுக்கு எதிர்பார்த்த மாறுதல் கிடைக்கும்.
தொழிலதிபர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு உற்பத்தியைப் பெருக்குவார்கள். . இதுவரை வசூலாகாமல் இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். கொள்முதல் செய்த பொருகள் யாவும் விற்பனையாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உற்பத்தி பெருகும் . புதிய வியாபார யுக்தியைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவார்கள். தொலலை கொடுத்துவந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள் ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்யமுடியாது.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அளவுக்கு மீறிய தலைக்கனம் உங்கள் மதிப்பெண்களைக் குறைத்துவிடும். உயர்கல்வி பெறும் மாணவர்கள் கேம்பஸில் செலக்ட் ஆவார்கள். காதல் வசப்படும் மாணவர்களுக்கு சனிபகவான்  படிப்பை கெடுப்பார். உங்களுக்கு தேவையற்ற  பிரச்சினைகளில் தலையிடவேண்டாம்.
கலைத் துறையினர் புதிய பட வாய்ப்புகள் கிடைத்து நன்கு புகழடைவார்கள். புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து ஒரு நல்ல படைப்பினை உலகுக்கு அளிப்பீர்கள். படப்பிடிப்புக்காக அயல்நாடு செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்ததைவிட அதிக பொறுப்பான பதவிகளில் அமர்த்த்ப்படுவார்கள். . உங்களுடைய உண்மையான உழைப்புக்காக  பொதுமக்களிடம் செல்வாக்கும் கட்சித் தலைவரிடம் நற்பெயரையையும் பெறுவீர்கள். கட்சியில் ஒரு நம்பிக்கை  நட்சத்திரமாகத் திகழ்வீர்கள். எச்சரிக்கயோடிருப்பது அவசியம். புதிய வண்டி வாங்குவீர்கள். சொத்துக்கள் சேர ஆரம்பிக்கும். பெண்கள் தொடர்பால் வழக்கை சந்திப்பது மட்டுமின்றி மீடியாக்களிலும் மாசுபடுத்தப்படுப்வீர்கள். போட்டியாக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள்.
துலாம்:
வக்கிர சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் இப்போது வக்கிர நிவர்த்தியாகி செப்டம்பர் 12-ம் தேதி முதல் உங்கள் ராசியில் ‘ஜென்ம சனி’யாக சஞ்சரிக்கிறார். சனிபகவான் ராசியில் உச்சம் பெற்றிருப்பதால், சிரமங்கள் குறையும். இந்தக் காலக்கட்டத்தில் பொறுப்பு கூடும். பலன் கூடுதலாக கிடைக்கும். தொழில் செய்பவர்கள் அதிகம் முதலீடு போட்டு அதிக லாபம் காண்பார்கள். பதவி உயர்வும் பொருளாதார உயர்வும் ஏற்படும். அடிக்கடி உடம்பு அசந்து போகும். பண வசதி இருந்தாலும், அதிக பயணங்களாலும் சுப காரியச் செலவுகளாலும்,பணப் பற்றாக்குறை ஏற்படும். 2013 வரை கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்காது. 2014-ல் கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்புறும்.  பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள். உடன்பிறந்தவர்களிடமிருந்து உதவி கிடைக்கும். திடீர் யோகத்தில் வீடு கட்டுவீர்கள். வெளிநாடு சென்று வேலை செய்யும் பிள்ளைகளின் வருமானம் கூடும். தாய் தந்தைக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு  படிப்படியாகக் குறையும். இந்தக் காலக்கட்டங்களில் பயணம் அதிகமாகும். வெளியூர்ப் பயணம் லாபகரமானதாக இருக்கும். மாற்றுமதத்தினராலும், வெளி மாநிலத்தாராலும் நற்பலன்கள் ஏற்படும். சிலர் வெளிநாடு சென்று லாபத்துடன் கூடிய தொழிலைச் செய்வார்கள். குடும்பத்தில் பல சீர்திருத்தங்கள் நடக்கும்.பங்காளிச் சண்டைகள் தீரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு  நல்ல வாரிசு உருவாகும். ரியல் எஸ்டேட்காரர்களிடம் இருந்துவந்த மந்த நிலை மாறும். கைநிறய பணம் கிடைக்கும். பிள்ளைகளின் மந்த நிலை மாறி கல்வியில் ஈடுபாடு காட்டுவார்கள். நீங்கள் யோசிக்காமல் செய்த காரியங்களில்கூட நல்ல லாபம் காண்பீர்கள்.கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல் வரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  உறவினர் பகை அகலும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். தொல்லை கொடுத்துவந்த பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக மாறுவார்கள். கூடுதல் வருவாய் உண்டு. அதுபோல் கூடுதல் செலவும் உண்டு. மனதில் எப்போதும் ஒருவித விரக்தி மனப்பான்மை இருக்கும். எதையும் அலட்சியமாகச் செய்வீர்கள். இந்தமாதிரியான செயல்கள்  உங்களுக்குப் பின்னடைவைத் தரும்.
அரசுத் தரப்பு ஊழியர்கள் அதிகாரிகளின் ஆதரவைப் பெற வேண்டுமானால், நேர்மையுடன் செயல்படவேண்டும். இடமாற்றத்தை சரியான முறையில் எதிர்கொள்ளவேண்டும். உடனடியாக புதிய இடத்தில் வேலையில் சேர வேண்டும்.அதை விடுத்து, அந்த இடமாற்றத்தை ரத்து செய்ய குறுக்கு வழிகளைக் கையாண்டால், அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகி தொல்லைகளைச் சந்திக்க வேண்டி வரும். பொருளாதாரத் தட்டுப்பாடுகள் இருக்காது. வரவேண்டிய அரசாங்க சலுகைகள் கிடைத்தவண்ணம் இருக்கும். அதிக வேலைப்பளு இருக்கும். சக பணியாளர்களால் சிறுசிறு தொந்தரவுகள். இருக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். பதவி உயர்வு வரும். ஆனால் கலம் தாழ்த்தி வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேண்டிய இட மாறுதலைப் பெறுவார்கள். இவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெண் ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருகக் வேண்டும். அவர்களால் வேண்டாத இடத்துக்கு மாறுதல் வ்ரக்கூடும்.
தொழிலை விரிவுபடுத்த  புதிய கிளைகள் தொடங்குவீர்கள்.   இரவுபகல் பாராது அயராது உஅழைத்து தொழிலைப் பெருக்குவீர்கள். வியாபாரம் குறைவின்றி நடக்கும். அதிக வாடிக்கையாளர்களுடன் லாபம் பெருகி தொழில் சிறக்கும். போட்டி விற்பனையாளர்கள் ஒதுங்கிவிடுவார்கள். வெளிநாடுகளிலிருந்து ஒப்பந்தம் கிடைத்து  உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி செய்யும் அத்தனை பொருள்களுக்கும் நல்ல விற்பனை இருக்கும். லாபம் பெருகும். தொழிலதிபர்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு தோன்றும். தொழிலாளர்கள் போட்ட வழக்குகள் வெற்றியடைந்து பணியிழந்த வர்கள் திரும்ப பணியில் சேருவார்கள். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் கிடைக்கும்.
உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு  கேம்பஸ் மூலம் தேர்வு செய்யப்பட்டு வேலை உறுதியாகும். பொதுவாக கல்வியில் உயர்வடையும் நேரம் இது. பாடுபட்டு உழைத்துப் படிக்கும் படிப்புக்கு  அதற்குரிய பலன் கிடைக்கும்.  இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறும். சிலருக்கு தான் என்ற அகங்காரம் வந்து படிப்பில் காலை வாரிவிடும். அதனால் மதிப்பெண்கள் குறைந்து  பின்னடைவு ஏற்படும். அதுபோல ஊர் சுற்றுபவர்கள், காதல் வசப்படுபவர்கள் இவர்களை சனிபகவான் கெடுத்துவிடுவார். காதல் வெற்றியடையாது. படிப்பும் பாழாகும்.
கலைத் துறையினருக்கு இது மிக நல்ல நேரம். புதிய வாய்ப்புகள் பெறுவதில் சில சங்கடங்கள் தோன்றலாம். ஆனாலும் புது வாய்ப்புகள் கிடைக்கும். படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல நேரும். . புகழுக்கும் குறைவில்லை. ஆனால் போட்டிகள் அதிகமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகள் புதிது புதிதாக தோன்றுவார்கள். இருக்கும் பதவியை தக்க வைப்பதே சிரமமாக இருக்கும். புதிய பதவி கிடைக்க 2013 வரை காத்திருக்க வேண்டும். 2013- ஆரம்பம் முதல் வீண் வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்வீர்கள். மறைமுக எதிரிகள் தங்கள் வேலையைக் காட்டுவார்கள். நீங்கள் தலைமையின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். மக்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படமாட்டார்கள். எதிலும் நிதானம் தேவை.
விருச்சிகம்:
இதுவரை வக்கிர சஞ்சாரத்திலிருந்த சனிபகவான் செப்டம்பர் 12-ம் தேதி முதல் வக்கிர நிவர்த்தியாகி  துலாசிக்கு இடம் பெயர்கிறார். இது உங்கள் ராசிக்கு ‘விரயச் சனி’ யாக இருந்த போதிலும் , சனி பகவான் உச்சமாக இருப்பதால், உங்களுக்கு நன்மையே செய்வார். அனைத்து நன்மைகளையும் அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் நன்மை பயக்கும். சொந்தத் தொழிலும் லாபமாக இருக்கும். வெளி நாட்டுத் தொடர்புகள் ஏற்படும். வெளிநாடு செல்லத் திட்டம் போட்டவர்கள் எண்ணம் ஈடேறும். பணம் கட்டாமலேயே இலவசமாக விசா பெற்று வெளிநாடு செல்வார்கள்.  வெளிநாட்டுப் பொருள்களை வாங்கி விற்க திட்டம் போட்டவர்கள் நஷ்டத்தை அடைவார்கள். வெளிநாட்டில் முதலீடு செய்து தொழில் துவங்கக்கூடாது. அதில் லாபம் காண முடியாது என்பதோடு பெருத்த நஷ்டத்தையும் சந்திக்க நேரும்.  கூடுதல் வருவாய் உண்டு. கூடுதல் செலவும் உண்டு.  எப்போதும் மனதில் விரக்தி மனப்பான்மை இருக்கும். எதையும் அலட்சியமாகச் செய்வீர்கள். இப்படிப்பட்ட அலட்சியப் போக்கு உங்களுக்குப் பின்னடைவைத் தரும். பெற்றோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்கத்திலிருந்து கிடைக்கவேண்டிய உதவிகள் அனைத்தும் கிடைக்கும். மனைவி மக்களால் சிறப்பு உண்டு. வண்டிவாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடிக்கோண்டிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். இதுவரை இருந்துவந்த கடன்பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் கொடுத்த கடன் வசூலாகும்.  தேவைகளுக்கு எப்போதும் கையில் பணம் இருக்கும். அந்நிய மதத்தினராலும், வேற்று மொழி பேசுபவர்கள் மூலமும் உங்களுக்கு நல்ல ஆதாயமும் உதவிகளும் கிடைக்கும். லாகிரி வஸ்துகள் விற்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சொத்துப் பிரச்சினைகள் தீரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை  இருந்து வந்த தொல்லைகளும் கஷ்டங்களும்  குறையும்.
அரசு வேலையில் உள்ளவர்களுக்கு  பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு அதிகமாகும். வேலை நிமித்தம் வெளியூர் செல்லும்போது உங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். பொருள்கள் திருட்டுப் போகும் அபாயம் உண்டு. அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேருவார்கள். உங்களுக்குத் தொல்லை தந்த அதிகாரி மாறுதலில் செல்வார். எனவே அவர் மூலம் நீங்கள் பட்ட அவஸ்தை நீங்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் தொழில் விரிவாக்கம் பற்றி இப்போது  யோசிக்க வேண்டாம். கொஞ்ச காலம் தள்ளிப்போடுங்கள். புதிய நண்பர்கள் பேச்சைக்கேட்டு தொழிலை விரிவாக்கம் செய்ய முனைந்தால் கைப்பொருள் வீணாவதுதான் மிச்சம். பழைய வாடிக்கையாளர்களை நேசத்துடன் வைத்துக்கொள்ளவும்.  தொழிலாளர்கள் உங்களுக்கு எதிராக திரும்பக்கூடும் என்பதால், அவர்களை அனுசரித்து செல்லவும். தாஜா பண்ணும் வேலைகள கொஞ்சம் தேவை. அப்போதுதான் உங்கள் வேலை கெட்டுப்போகாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் நல்ல லாபம் காண்பர். அதிக முதலீடு செய்து அதிக லாபம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை மாறும். போட்டியாக இருந்த வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து வியாபாரம் விரிவடையும். கொள்முதல் செய்த சரக்கு அத்தனையும் விற்பனையாகும்.அவற்றை கூடுதல் விலைக்கு விற்று அதிகமான லாபம் பெறுவீர்கள்.தொழிலாளர் நடுவில் ஒற்றுமை குறையும். முதலாளிகளை அனுசரித்துப் போக வேண்டும்.  வீண் போராட்டங்களைத் தவிர்க்கவும். தொழிலாளர்கள் தொழிற்சங்கம் மூலம் போட்ட வழக்குகளில் சாதகமாகத் தீர்ப்பு வரும். மேலிடத்திலிருந்து கிடைக்கவேண்டிய அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும். மேலோட்டமான முயற்சிகள் வெற்றியளிக்காது. கல்வியில் உள்ள மந்தநிலை மாற நீங்கள் விழிப்புடன் படித்து வரவேண்டும். பெற்றோர்களுக்கு கீழ்ப்பணிந்து நடப்பது இந்த பிராயத்தில் நல்லது செய்யும். ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தைச் செலுத்தவேண்டாம். பெற்றோர் ஆசிரியர் அறிவுரைப்படி நடப்பது  உங்களை பல தீமைகளிலிருந்து காப்பாற்றும். உயர் கல்வி படிப்போரில் சிலருக்கு கேம்பஸ் மூலம் வேலை கிடைக்கும்.
கலைத் துறையினர் யாரிடமும் அதிக பணத்தைக் கொடுத்து ஏமாறக்கூடாது. அவசரப்பட்டு முடிவு எடுப்பதையும் தவிர்க்கவும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும், போட்டியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். மற்றவர்களைப்பற்றி புறம் பேசுவதையும் அவர்களை விமர்சிப்பதையும் செய்யவேண்டாம். உங்கள் எதிரிகள் நீங்கள் பேசியதை தவறாமல் எடுத்துச் சென்று சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி உங்கள் வளர்ச்சிக்கு வேட்டு வைப்பார்கள். எனவே எச்சரிக்கை அவசியம்.
அரசியல்வாதிகள் திறம்பட மக்கள் பணியாற்றுவார்கள்.  அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவார்கள். பொருளாதார நிலை உயரும். தேவைக்கு அதிகமான ப்ணவரவு இருக்கும்.  மக்கள் மத்தியில் உங்கள் சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.  தலைமையால் பாராட்டப்படுவீர்கள். உங்களை எதிர்த்தவர்கள்  விலகிப் போவார்கள்.
தனுசு:
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் வக்கிர நிவர்த்தியான சனிபகவான் செப்டம்பர்  12-ம் தேதி முதல்  சஞ்சாரம் செய்யவுள்ளார். நல்ல பலன்களாக நடக்கும். பயணத்தால் நன்மையுண்டு. குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன்-மனைவி உறவில் விரிசல் வராது.  பிரிந்து சென்ற கணவன்-மனைவி ஒன்று சேருவார்கள். பிள்ளைகளால் நன்மை நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. இதுவரை வராமல் இருந்த பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். முக்கியமாக எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. ஒரு வழியில் பணம் வந்துவிடும் என்று நினைத்து . கையில் இருக்கும் பணத்தை செலவு செய்யவேண்டாம். சகோதர-சகோதரிகள் சொத்துக்காக உங்களுடன் சண்டை போடுவார்கள்.  உடன்பிறந்தவர்கள் உங்கள் வருமானத்தைக் கெடுப்பார்கள். அவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படமாட்டார்கள்.  வீட்டில் சுப காரியப் பேச்சுகள் நடக்கும். ஆனால் இப்போது திருமணம் நடத்தக்கூடாது. . நடத்த நேர்ந்தால் பெரும் தொகையை கடனாகப் பெற்று நீங்கள் கடனாளியாவீர்கள். எனவே செலவு வகையான காரியங்களை தாமதப்படுத்தி செய்யவும். வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்படும். நல்ல வருமானம் கிடைக்கும். வரவேண்டிய பாக்கித் தொகைகள் வசூலாகும். வெளிநாட்டு வேலைக்கு முயல்பவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வருமானம் நிறைய இருந்தாலும் மனைவியுடன் சண்டை வரும். லாகிரி வஸ்துக்கள் விற்பனை நல்ல லாபத்தைக் கொடுக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். இதுவரை பாடாய்ப் படுத்திய கோர்ட் வழக்குகள் முடிவுக்கு வரும். வேலை இல்லாத இளைஞர்கள் நல்ல வேலையை அடைவார்கள். சிலர் ஐ.ஏ.எஸ். ;ஐ.பி.எஸ். போன்ற பெரிய பதவிகளை அடைவார்கள். மருத்துவத் தொழில் செய்பவர்கள், மருந்து உற்பத்தி செய்பவர்கள் ஆகியோர் நலம் பெறுவார்கள். நீதித் துறையில் பணி புரிபவர்கள், வக்கீல்கள் வாழ்வில் வளம் பெருகும். குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டிவரும். உங்கள் குடும்பத்தில் காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்த குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் இடம் தெரியும். அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். போன் மூலம் நல்ல சேதி வரும். குடும்பத்தினரின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் சீக்கிரம் நடந்தேறும். அதிலும் நல்ல வரன்கள் அமையும்.
அரசு ஊழியர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அதிகாரிகள் மாற்றலாகிப் போய் விடுவார்கள். இதன்மூலம் உங்களைப் பிடித்து ஆட்டிவைத்த  தொல்லைகள்  நீங்கும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துவந்த பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும் மீண்டும் பணியில் சேர்வார்கள். அரசு சலுகைகள் தடையின்றிக் கிடைக்கும். சில நல்ல ஊழியர்கள் அதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். வேலைப்பளு கூடும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் தற்போது  தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யவேண்டாம்.  வியாபாரிகளுக்கு விற்பனை அமோகமாக இருக்கும். வெளிநாட்டு வியாபாரங்கள் சிறப்படையும். வருமானமும் எதிர்பார்த்த அளவு கிடைக்கும். தொழிலாளர்களுக்கு மேலிடத்து ஆதரவு கிடைக்கும். இதுவரை கிடைக்காமல் தடைப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் கிடைக்கும். முதலாளிகள் தொழிலாளிகளை அனுசரித்துச் செலல்வேண்டியது மிகவும் அவசியம். தொலழிலதிபர்கள் எதிர்பார்த்த வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைப்பது சிரமமாகும். புதிய வாடிக்கையாளர்கள் பெருகி பெருத்த அளவில் லாபம் கிடைக்கும். கொள்முதல் செய்த பொருள் யாவும் விற்பனையாகும். சிறுதொழில் செய்யும் வியாபாரிகளும், நடைபாதை வியாபாரிகளும் நல்ல லாபம் காண முடியும்.
மாணவர்கள் படிப்பில் நன்கு சிறந்து விளங்குவார்கள். சிலர் கேம்பஸ் மூலம் வேலை கிடைக்கப் பெறுவார்கள். இதுவரை கல்வியில் இருந்துவந்த மந்த நிலை மாறி படிப்பில் நல்ல விதமாக தேர்ச்சி பெறுவார்கள்.
கலைத் துறையில் ஈடுபட்டவர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். நினைத்தது நடக்கும். சிறப்பான பட வாய்ப்புகளும்  நல்ல கதாபாத்திரங்களும் கிடைத்து அரசு விருதுகளைப் பெறுவீர்கள். படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சமுகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய பதவி கிடைக்கும். உங்களது தன்னலமற்ற உழைப்புக்கு மக்களும் உங்கள் கட்சித் தலைமையும் உங்களைப் பாராட்டும். இதுவரை உங்களை  இகழ்வாகப் பேசியவர்கள் வலிய வந்து உங்களைப் புகழ்வார்கள்.
மகரம்:
செப்டம்பர் மாதம் 12-ம் தேதி முதல் சனி பகவான் வக்கிர நிவர்த்தியாகி துலா ராசியில் சஞ்சரிக்கிறார். அதாவது உங்களுக்கு சனி பகவான் 10-மிடத்தில் சஞ்சாரம் செய்கிறார். சனி பகவான் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால், நல்ல பலன்களாக  நிகழும். பொருளாதாரத்தை மிக சிக்கனமாக கையாளவேண்டும். கடன் தொல்லைகளிலிருந்து மீளலாம். வெளிநாடு செல்ல விரும்புவோரின் ஆசை நிறைவேறும்.  உங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள்  உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பொருளாதரப் பிரச்சினை தீரும். குடும்பப் பொறுப்புகள் கூடும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். பெற்றோர்களின் மருத்துவச் செலவு குறையும். ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்து வாழ்ந்த தம்பதியர் ஒன்று சேர்வர். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். பணம் சரளமாக புழங்கும். வருமானம் அதிகமாக வந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும். வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள் வந்து செல்வார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொத்துகள் நல்ல விலைக்கு விற்பனையாகும். ரியல் எஸ்டேட் துறை நல்ல லாபத்தைத் தரும். சிலர் மத்திய அரசுப்பணியில் ஐ.ஏ.எஸ் .;ஐ.பி.எஸ். முதலிய உயர் பதவிகளில் தேர்ச்சி பெறுவார்கள். பிள்ளைகளின்  தேவை அனைத்தும் பூர்த்தியாகும். திருமணப் பேச்சுகள் கைகூடும். நலல் வரன்கள் கிடைக்கும். வீட்டுக்குத் தேவயான ஆடை அணிகலன்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். உடன்பிறந்தோரிடமுள்ள போட்டி பொறாமை விலகும். கணவன் -மனைவி ஒற்றுமை ஓங்கும். தூரதேசப் பயணம் சென்ற கணவர் திரும்ப வருவார். மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தால், சனி பகவான் நன்மையான பலன்களைத் தருவார். தீய குணமுள்ளோரை அடஹ்ல பாதாளத்தில் தள்ளுவார். தாய் தந்தையை காப்பாற்றாமல் உதாசீனம் செய்தால், தக்க தண்டனையை அனுபவிப்பீர்கள்.  உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவு கூடும். மனதில் சிலசமயம் பயமும் கலக்கமும் தோன்றும். போட்டி பந்தயங்கலில் நலல் லாபம் வரும். வெளிநாட்டிலிருந்து வரும் செய்திகள் நலல் செய்திகளாக இருக்கும். வாழ்க்கையில் இருந்து வந்த தொலலிகள் நீங்கி தன்னிறைவடையும் காலம் இது.
அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு வேலைப் பளு அதிகமாகும். அரசிடமிருந்து வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வும் பணிமாற்றமும் சேர்ந்து வரும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்களை நம்பி காரியத்தில் இறங்கக் கூடாது. அவர்களால் உதவிகளைவிட உபத்திரவம்தான் அதிகமாகும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் திரும்ப வேலையில் சேர்வார்கள்.வியாபாரிகள் தங்கள் கொள்முதல் சரக்குகளை வெளிச்சந்தையில் நல்ல விலைக்கு விற்பார்கள்.
புதிய தொழிற்சாலை அமைககப் போட்ட திட்டம் நிறைவேறும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் நல்ல லாபத்தைத் தரும். முதலாளி தொழிலாளியிடையே நல்ல ஒற்றுமை நிலவும். . இந்த நல்லுறவு உற்பத்தி பெருகக் காரணமாகும். தொழிலாளர்களுக்கு வழக்குகள் சாதகமாக வரும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் திரும்ப பணியில் சேருவார்கள்.
மாணவர்களுக்கு கலவியில் இருந்துவந்த மந்த நிலை மாறும். மாணவர்கள் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் முன்னேற முடியும்.  கூடுதல் மதிப்பெண்கள் பெற கடுமையாக உழைத்துப் படைத்தால்தான் முடியும். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளையும் ஆராய்ச்சியில் வெற்றியும் காண்பார்கள். கல்வி நிறுவனமும் இவர்களைப் பாராட்டி மகிழும்.
கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்வார்கள். கலைத் தொழில் லாபகரமாக இருக்கும். அடுத்தவர்களை முழுமையாக நம்பி எதியும் சொல்லாதீர்கள்.  தடைப்பட்டு வந்த படவாய்ப்புகள் இனி தடையின்றி கிடைக்கும். வருமானம் குறைவில்லாமல் வரும்.
அரசியல்வாதிகளின் நினைத்தபடி பொதுமக்களின் ஆதரவு கிட்டும்.  செல்வாக்கு உயரும். உங்கள் நல்ல செயல்கள் தலைமைக்குத் தெரிய வந்து நீங்கள் கேட்காமலேயே புதிய பதவிகளைத் தருவார்கள்.  எதிரிகள் விலகிச் செல்வார்கள். சிலர் அரசாங்க கௌரவம் உள்ள பதவிகளை அடைவார்கள். சிலர் அரசு செலவில் வெளிநாடு சென்று வருவார்கள். பொருளாதார உயர்வும் உண்டு.
கும்பம்:
செப்டம்பர் மாதம் 12-ம் தேதி முதல் சனி பகவான் வக்கிர நிவர்த்தி பெற்று துலா ராசியில்  உச்ச சனியாக  சஞ்சரிக்கிறார். அதாவது உங்கள் ராசிக்கு 9-மிடத்தில் சனி வருவதால் உங்கள் அஷ்டமத்துச் சனி முடிவடைகிறது. இதனால் நீங்கள் பெரும்பாலும் நல்ல பலன்களையே அனுபவிப்பீர்கள். சகோதரர்களிடையே ஒற்றுமை ஓங்கும். சொத்துப் பிரிவினை கூட சுமுகமாக தீர்க்கப்படும். குடும்பத்துக்கு தேவையான பொன்னையும் பொருளையும், வீட்டுத் தேவைப் பொருளையும் வாங்குவீர்கள். பொருளாதார உயர்வும் தன தான்ய விருத்தியும் உண்டாகும். உங்கள் முயற்சிகளில் நல்ல பலனை அடைவீர்கள். உடல்நிலை சீராகும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வயது வந்த பிள்ளைகள் காதல் வசப்படுவர். எனவே பெற்றோர்கள் விழிப்பாக இருக்கவேண்டும். இந்தக் காலக் கட்டத்தில் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல் -வாங்கல் லாபமாக அமையும். வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டிலிருந்தோ வெளியூரிலிருந்தோ வரும் செய்திகள் நல்ல  செய்திகளாக இருக்கும். சிலர் வீடுகட்ட போட்ட  திட்டம் நிறைவேறும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனத்தை வாங்குவீர்கள். மாமன் மைத்துனர் வழிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது. அண்டை அயலார் உங்களுக்கு உதவி செய்வார்கள். வீட்டில்  சுபகாரியப் பேச்சுகள் நடக்கும். நல்ல வரனாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர் சேர்ந்து வாழ்வர். குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் கேட்டதை வாங்கிக்கொடுப்பீர்கள்.  குடும்ப செலவுக்குத் தேவையான வருமானம் கிடைக்கும். வேலை வாய்ப்புக்காக  வெளிநாடு  செலல் விரும்பும் பிள்ளைகளின் எண்ணம் ஈடேறும். திட்டமிட்டபடி வெளிநாடு சென்று படிப்புக்கேற்ற நல்ல வேலையில் சேர்வார்கள். கணவன்-மனைவி பேச்சில் இனிமை கூடும். விலகிச் சென்ற சொந்தங்கள் திரும்பி வந்து சேரும். வேலை இல்லாத இளஞ்ர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலர் மத்திய அரசுப் பணியில் சேருவார்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்துவந்த வில்லங்கங்கள் தீரும். மாற்று மதத்தினர் உதவி செய்வார்கள்.
அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளூ கூடும். வரவேண்டிய சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். இதுவரை தடைப்பட்டு வந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை இப்போது கிடைக்கும். கடந்த அஷ்டமத்து சனியில் பணிநீகக்த்தை சந்தித்தவர்கள் இப்போது பணியில் திரும்ப சேருவார்கள். கெடுத்த சனிபகவான் கொடுத்துவிட்டு செல்வார். அதிகாரிகள் அனுசரணை உண்டு.
தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் தொழில் தொடங்கும் எண்ணம் ஈடேறும். அயல்நாட்டு வணிகம் செய்பவர்கள் நிதானத்துடன் செயல்படவேண்டும்.  பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் முதலீடு செய்வீர்கள். . வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படும்.  சிறு வியாபாரிகளும் நடைபாதை வியாபாரிகளும் நல்ல லாபம் காண்பர். தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமிடையில் நல்லுறவு இருக்கும். தொழிலாளர்கள் சுறுசுறுப்புடன் செயலாற்றுவார்கள்.
மாணவர்கள் கடும் முயற்சி செய்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும்.  தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது இல்லையா? அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமானால், அதிகம் உழைக்க வேண்டும். கேளிக்கைகள் பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.  உய்ர் கல்வியில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதால், கல்வி நிறுவனத்தின் பாராட்டு கிடைக்கும்.  நியாயத்துடன் நடப்பவர்களுக்கு கேம்பஸ் செலக்ஷன்  கிடைக்கும். தீய வழியைப் பின்பற்றும் மாணவர்கள் காவல்துறை நடவடைக்கைகளுக்கு ஆளாவார்கள்.
கலைத் துறையினருக்கு வருமானத்துக்கு குறைவிலலை. மற்றவர்களின் பேச்சைக் கேட்காமல், சுயமாக முடிவெடுக்கவேண்டும்.புதிய பட வாய்ப்பினைப் பெறுவார்கள். பேரும் புகழும் அடைவார்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பொதுமக்கள் உங்கள் சேவையைப் பாராட்டுவர். கட்சித் தலைமையும் உங்களைப் பாராட்டும். உங்கள் செல்வாக்கு உயரும். ஏமாற்றும் அரசியல்வாதிகள் உங்களிடம் எதிர்கொள்ள முடியாமல் ஓடுவர். வண்டிவாகனத்தில் செல்பவர்கள் மெதுவாகச் செல்லவேண்டும். அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இப்போது அரசியல் காற்று சாதகமாக வீசவில்லை. சனிபகவான் அவர்களுக்கு பக்கபலமாக இல்லை என்பதால் நிதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும். பதவிகள் கிடைப்பதும் தாமதமாகும்.
மீனம்:
இதுவரை கெண்டசனியாக வக்கிர சஞ்சாரம் செய்துவந்த சனிபகவான் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி முதல்  அஷ்டம சனியாக சஞ்சரிக்கவுள்ளார். நீங்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்ளவேண்டும். செய்யும் தொழிலில் இடையூறு வரலாம். தொழிலுக்காக வெளியூர் செல்லவேண்டி வரும். வெளிநாடு செல்லத் திட்டமிட்டவர்கள் வெளிநாடு செல்வார்கள். அந்நிய மதத்தினர் மற்றும் அந்நிய மாநிலத்தவரால் அனுகூலம் உண்டு என்றாலும் சிலர் உங்களுக்கு மறைமுகமாக கெடுதலும் செய்யலாம். நஷ்டத்தை உண்டுபண்ணலாம். சனிபகவான் தனது  உச்ச வீட்டில் சஞ்சரிப்பதால், அதிகமான கெடுதல்களைத் தரமாட்டார். ஆனாலும்  சிறு சிறு சலசலப்புகளை  சமாளீப்பதற்கு உங்கள் நிதானம் உங்களை பலவிதமாகக் காப்பாற்றும். தம்பதியர் பிரிந்து வாழ நேரும். அப்படிப் பிரிந்திருப்பது இந்தக் காலத்தின் கட்டாயம் என்பதால் பிரித்துவைப்பதன் மூலம் சனி பகவான் நன்மை செய்கின்றார் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் வேலைக்காக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்வார்கள். அது உங்கள் பணப் பற்றாக்குறையைப் போக்கும். குடும்பத்தினருக்கு அது ஒரு நன்மையாக முடியும்.உடல் ஆரோக்கியமும் தொல்லை கொடுக்கும். ரத்தம் சம்பந்தமான பாதிப்பு ஏற்படவுள்ளது. உடலில் தளர்ச்சி ஏற்படும். நினைப்பதற்கு மாறாக காரியங்கள் நடக்கும். நண்பர்களே விரோதிகள் போல் கலக வார்த்தைகளைப் பேசி உங்கள் ந்ம்மதியைக் கெடுப்பார்கள். உங்களுடைய கோபதாபங்களும் பிடிவாதங்களுமே உங்களை சங்கடத்தில் ஆழ்த்திவிடும். ஆடம்பர ,செலவுகளும்  தேவையற்ற  விதத்தில் பொருட் செலவுகளும் செய்து பண விரயத்தை ஏற்படுத்தி பொருளாதார கஷ்டங்களை ஏற்படுத்திவிடுவீர்கள். உங்களுக்கு அருகாமையில் இருப்பவர்களே உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளைக் கொடுப்பார்கள். . அறிமுகமற்ற பெண்களிடம்  பழகவேண்டாம். தீய நோகக்ம் உள்ளவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பிள்ளைகளின் திருமணத்தை முடிக்காதீர்கள். சிரமம் உடனடியாக வரும்.  2013ல் நிலமை சற்று மாறும். பிரிந்து வாழும்  கணவன் மனைவி ஒன்று சேர்வர். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் திருமணத்தில் முடியும். பிள்ளைகள் வெளிநாடு சென்று வேலை செய்வார்கள். சிலருக்கு மத்திய அரசில் வேலை கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேர்வர். தூர தேசம் சென்றுவிட்ட கணவர் திரும்ப வந்து சேர்வார். காணாமல் போனவர்களும் தானாகவே திரும்ப வந்து சேர்வார்கள்.  2014-லும் வசந்தகாலமாகவே இருக்கும். அதிக வருமானத்தைப் பெறுவீர்கள்.  மனைவி வழியில் பெறவேண்டிய சொத்துக்கள் சிலருக்கு கிடைக்கும். பிரிந்து வாழ்ந்த தமபதியர் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து கைநிறைய அனுப்புவார்கள்.  காலம் தாழ்த்தினாலும் 2014ல் சனிபகவான்  உங்கள் சொத்துக்கள் வாயிலாகவும் பூர்வீக சொத்துக்கள் வாயிலாகவும் நல்ல லாபத்தை வரவழைத்துக் கொடுப்பார். குழந்தை இல்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவர். பெற்றோருக்கான மருத்துவச் செலவு குறையும். சனிபகவானின் தாக்கம் குறைந்துவிடும். குடும்பம் நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பிக்கும்.
அரசு ஊழியர்கள் கட்டாய இடமாற்றத்தைச் சந்திப்பார்கள். உத்தரவுப்படி பணியில் சேரவேண்டும். மாறாக அந்த உத்தரவை கேன்சல் பண்ணும் முயற்சிகளை  மேற்கொண்டீர்களானால், நிர்வாகத்தின் கோபத்துக்கு ஆளாக நேரும். கூட வேலை செய்யும் பெண்களிடம் ஜாக்கிரதையாகப் பழகவும். அலுவலகத்தில் வேலைப்பளு கூடும்.  யாரையும் நம்பி உங்கள் பொறுப்பை ஒப்படைக்காதீர்கள்.  2013ல் நிலமையில் சிறிது மாற்றம் வரும். இச்சமயத்தில் அரசு ஊழியர்களுக்கு வேண்டிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள்.சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய மாறுதல் வரும். சக ஊழியர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவர்.  அரசிடமிருந்து வரவேண்டிய சலுகைகள் வந்து சேரும். அதிகாரிகள் ஒத்துழைப்பு கிட்டும். எந்த அளவுக்கு அதிகாரிகளின் சொல்லைக் கேட்கிறார்களோ அந்த அளவுக்கு எல்லா உயர்வுகளும் உங்களுக்கு கிடைக்கும்.
தொழிலதிபர்கள் தொழில் விருத்தி செய்வதைத தள்ளி வைக்கவேண்டும். புதிய கிளைகள் திறக்க முயல வேண்டாம். வீண்முயற்சியாகிவிடும். தொழிற்சாலை வருமானம் குறைந்து  தொழிலாளர்களுடன் பிரச்சினைகள் வரலாம்.வாடிக்கையாளர்கள் வேறு  பிரான்ட் உள்ள பொருளைத் தேடிச் செல்லாமல் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளவேண்டும். அதிகமாக  கடன் கொடுக்காதீர்கள் . போட்ட முதல் போய்விடும்.   பொருள்களை வாங்கி தேக்கி வைக்காதீர்கள். வாடிக்கையாளர்கள் நிறைய வந்தாலும் தொல்லை தரும் வியாபாரிகள் உங்கள் பக்கத்தில் உள்ளதை தவிர்க்க வேண்டும். போட்டி வியாபாரிகளையும்  கண்காணித்துக்கொள்ளவேண்டும்.  2013ல் உங்கள் நிலை சற்று மாறி உங்களை விட்டு  விலகிச் சென்ற  தொழில்-கூட்டாளிகள் திரும்ப வந்து சேர்வார்கள்.  சிறு வியாபாரிகளும் நடைபாதை வியாபாரிகளும்  நல்ல லாபம் காண்பர். தொழிலாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அவர்களின் ஒத்துழைப்போடு உற்பத்தியைப் பெறுக்குவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். ஷேர் மார்க்கெட் தொழில் உங்களுக்கு லாபகரமாக இருக்காது.எண்ணெய், நெல் வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள்.  தொழிலாளர்கள்  சற்று சிரமப்பட்டு உழைக்க வேண்டியிருந்தாலும்  அதற்கேற்ற ஊதியமும் வந்து சேரும். மற்றவர் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழிற்சங்கம் வாயிலாக தொழிலாளர்கள் போட்ட வழக்குகள் வெற்றியடைந்து தொழிலாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுத் தரும்.
மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கேளிக்கைகள் பொழுதுபோக்குகளைத் தவிர்க்கவேண்டும்.  சில மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். அதனால் விரும்பிய படிப்பை படிக்க முடியாமல் சிரமப்படுவார்கள்.  உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு கேம்பஸில் வேலை கிடைக்கும். வேலை வாய்ப்பையும் பெறுவார்கள்.
கலைத் துறையினர் தங்களுடைய கோபத்தினாலும் அவசர புத்தியாலும்  வருகிற வாய்ப்பினை நழுவ விடுவார்கள். சூழ்நிலையை அனுசரித்து விட்டுக்கொடுத்து நாடந்து கொள்ளவேண்டும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய பட வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் வெளிநாடு சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள். இவர்களின் படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்.
இப்போது அரசியல்வாதிகளுக்கு நல்ல நேரம் கிடையாது. கட்சித் தலைமையோ பொதுமக்களோ உங்களைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். தன்னலம் கருதாத உங்கள் உழைப்புக்கு 1 வருடம் கழித்து பலன் கிடைக்கும். அப்போது பொது மக்களின் பாராட்டும் கட்சித் தலைமையின் அங்கீகாரமும் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள் பொதுமக்களின் பாராட்டும் கட்சித் தலைமையின் அங்கீகாரமும் கிடைக்கும்.
நன்றி : மூன்றாம் கோணம் 

28 May 2011

நகரத்தார் வரலாறு

இந்த பதிவில் நகரத்தார் வரலாறு முழுவதுமாக(உறுதிக்கோட்டை வட்டகை வரலாறும் சேர்த்து) கொடுக்கப்பட்டுள்ளது.

நகரத்தார் பெண்கள் குரு துலாவூர் ஆதீன மடாதிபதி கயிலைமணி,சிவத்திரு நிரம்ப அழகிய ஞானப்பிரகாசதேசிக சுவாமிகள் அவர்களால் எழுதப்பட்ட வரலாறு.

உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் இணைப்பு முயற்சி

உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் இணைப்பு முயற்சிபெரிதாக பார்க்க இந்த பதிவில் கிளிக் செய்யவும்

11 May 2011

திருப்புகழ்

திருப்புகழ் - முத்தைத் தரு...

வெவ்வேறு இசை கலைஞர்களின் திரட்டுகள்

திருப்புகழ் - டி.எம்.சௌந்தர ராஜன்

திருப்புகழ் -  சுதா ரகுநாதன்

திருப்புகழ் - அருணா சாய்ராம்

திருப்புகழ் -  நித்ய ஸ்ரீ மகாதேவன் & ஸ்ரீனிவாஸ்

திருப்புகழ் - குன்னக்குடி வைத்தியநாதன்

திருப்புகழ் - கத்ரி கோபால்நாத்

Key Words - Search:- Thirupugal , Thirpukal , Thirupugazh, Thirupukazh

25 Apr 2011

ராங்கியம் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி

சன் டிவி தெய்வ தரிசனம் வீடியோ


Rangiyam Sri Karuppanna Swamy 
Sun TV Deiva Dharisanam Video
Key Search Words: Rangiyam Karuppar, Urangapuli Karuppar, ராங்கியம் கருப்பர், உறங்காப்புளி கருப்பர், உறங்கா புளி

24 Apr 2011

Nagarathar Thirumanam - Anrum Indrum Drama

Nagarathar Thirumanam - Andrum Indrum - Drama
Drama Performed by Canada Nagarathar Sangam on thier Deepavali Celebrations - 2009
Courtesy: Canada Nagarathar Sangam
நகரத்தார் திருமணம் அன்றும் இன்றும் - நாடகம்
நன்றி: கனடா நகரத்தார் சங்கம்

Part 1

Part 2

Part 3

Part 4

Nagarathar History - Kalaingar TV Program
நகரத்தார் திருப்பரங்குன்றம் 18 ம் ஆண்டு பாதயாத்திரை படங்கள்Key Search Words: Nagarathar, Thirupparankundram, Pathayathirai, Kavadi, Palkudam, Nattarasan Kottai, Kannathal Kovil, Muthupatti, kavingar appatchi sabapathi, AR.Somasundaran, Uruthikottai, Uruthikkottai Vattagai, Pattamalippu, Thangaratham, S.Sokkanathapuram, Kumaravelur, Seenamangalam, Shanmuganatha Pattanam, Thirani, Avarangudi, Karunkulam, Kalayar Kovil, Sivagangai .